< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
ராஜபாளையம் பகுதியில் மழை
|10 Oct 2023 12:43 AM IST
ராஜபாளையம் பகுதியில் மழை பெய்தது.
ராஜபாளையம் நகர் பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது பின்னர் குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் மழை நீர் ஆங்காங்கே சாலையில் தேங்கி இருந்தன. பஞ்சு மார்க்கெட் நேரு சிலையில் இருந்து பழைய பஸ் நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, காந்தி கலை மன்றம், சங்கரன்கோவில் முக்கு, சொக்கர் கோவில் வரை மழை பெய்தது. அதேபோல பல்வேறு இடங்களில் பெய்த சாரல் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.