< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
ராசிபுரத்தில் திடீர் மழை வயல்களில் தண்ணீர் தேங்கியது
|30 May 2022 9:16 PM IST
ராசிபுரத்தில் திடீர் மழை வயல்களில் தண்ணீர் தேங்கியது
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கத்திரி வெயில் முடிவடைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு ராசிபுரம், கவுண்டம்பாளையம், கோனேரிப்பட்டி, ஆண்டகளூர் கேட், முத்துக்காளிப்பட்டி, பட்டணம் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே பள்ளங்கள் மற்றும் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. பகல் நேரத்தில் வாட்டி வதைத்த வெயில், மழை பெய்த பின் இரவு நேரத்தில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.