< Back
மாநில செய்திகள்
குமரியில் மழை:  பாலமோர் பகுதியில் 60.4 மி.மீ. பதிவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரியில் மழை: பாலமோர் பகுதியில் 60.4 மி.மீ. பதிவு

தினத்தந்தி
|
19 Sept 2022 12:15 AM IST

குமரியில் மழை: பாலமோர் பகுதியில் 60.4 மி.மீ. பதிவு

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில், பாலமோர் பகுதியில் 60.4 மி.மீ. பேச்சிப்பாறை அணைப் பகுதியில் 2 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 616 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 439 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 43.74 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 478 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 425 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 72.29 அடியாக உள்ளது. சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 101 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 11.45 அடியாக உள்ளது. முக்கடல் அணைக்கு வினாடிக்கு 5.6 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் எடுக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 13.90 அடியாக உள்ளது.

மேலும் செய்திகள்