< Back
மாநில செய்திகள்
குமரியில் மழை:  சிற்றார்-2 அணை பகுதியில் 23.6 மி.மீ. பதிவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரியில் மழை: சிற்றார்-2 அணை பகுதியில் 23.6 மி.மீ. பதிவு

தினத்தந்தி
|
4 July 2022 8:21 PM IST

குமரியில் மழை: சிற்றார்-2 அணை பகுதியில் 23.6 மி.மீ. பதிவு

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதிலும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. ேநற்று முன்தினம் மாலை மற்றும் இரவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் சிற்றார்-2 அணை பகுதியில் அதிகபட்சமாக 23.6 மில்லி மீட்டர் மழை பதிவானது நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பூதப்பாண்டி-1.6, சிற்றார் 1-10.4, கன்னிமார்-2.4, கொட்டாரம்-15.4, மயிலாடி-4.4, நாகர்கோவில்-3.8, பேச்சிப்பாறை-15.2, பெருஞ்சாணி-10.2, புத்தன்அணை-8, சுருளகோடு-9, தக்கலை-7.4, குளச்சல்-4, இரணியல்-3.4, பாலமோர்-8.4, மாம்பழத்துறையாறு-9.2, அடையாமடை-3, குருந்தன்கோடு-3.2, முள்ளங்கினாவிளை-15.4, ஆனைகிடங்கு-8.2, முக்கடல்-4.5 என்ற அளவில் மழை பதிவான.

குமரி மாவட்ட அணைகளில் ஏற்கனவே போதுமான அளவு தண்ணீர் இருக்கும் நிலையில் மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.

மேலும் செய்திகள்