< Back
மாநில செய்திகள்
குமரியில் மழை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரியில் மழை

தினத்தந்தி
|
14 May 2023 12:15 AM IST

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 57.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. திற்பரப்பில் சாரல் மழை பெய்வதால் குளு... குளு... சீசன் நிலவுகிறது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 57.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. திற்பரப்பில் சாரல் மழை பெய்வதால் குளு... குளு... சீசன் நிலவுகிறது.

மழை

குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல நேற்றும் பல இடங்களில் மழை பெய்தது. நாகா்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை 2 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை 7 மணி வரை மிதமாக பெய்து கொண்டே இருந்தது.

இதுபோல் மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. காலை 9 மணிக்கு பிறகு வழக்கம் போல வெயில் அடிக்க தொடங்கியது.

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 57.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

நாகர்கோவில்

இதுபோல் களியல்-4, குழித்துறை-9, மயிலாடி-11, நாகர்கோவில்-27.4, புத்தன்அணை-14.4, தக்கலை-49.3, இரணியல்-8.4, பாலமோர்-5.4, கோழிப்போர்விளை-27, குருந்தன்கோடு-52, ஆனைக்கிடங்கு-34.2 என்ற அளவில் மழை பெய்துள்ளது.

அணை பகுதிகளில் பேச்சிப்பாறை-2.2, பெருஞ்சாணி-15.2, மாம்பழத்துறையாறு-37 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

அணை நிலவரம்

மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 160 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 241 கனஅடி தண்ணீர் வருகிறது. இதே போல சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 26 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 42 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் நாகர்கோவில் மாநகரின் குடிநீருக்காக பெருஞ்சாணி அணையில் இருந்து முக்கடல் அணைக்கு வினாடிக்கு 51 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது.

திற்பரப்பு

மலையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் அருவிப் பகுதியில் குளு... குளு... சீசன் நிலவி வருகிறது. விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும், அருவி எதிரில் உள்ள நீச்சல் குளத்திலும் நீச்சலடித்து குதூகலமடைந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்