< Back
மாநில செய்திகள்
குமரியில் பரவலாக மழை பாலமோரில் 27.4 மில்லி மீட்டர் பதிவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரியில் பரவலாக மழை பாலமோரில் 27.4 மில்லி மீட்டர் பதிவு

தினத்தந்தி
|
11 Oct 2022 6:45 PM GMT

குமரியில் பரவலாக மழை பெய்தது. பாலமோரில் 27.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் வானில் கார்மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. மலையோர மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 27.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சிற்றார் 1- 6.2, பேச்சிப்பாறை- 14.2, பெருஞ்சாணி- 7.2, புத்தன்அணை- 5.8 என பதிவாகி இருந்தது.

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 557 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 584 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 86 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 350 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்