கன்னியாகுமரி
குமரியில் சாரல் மழை
|குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. நேற்றுமுன்தினம் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் வானில் கார்மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. ஆனால் மழை பெய்யவில்லை.
நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை- 5.2, பெருஞ்சாணி- 3.8, புத்தன்அணை- 2.6, சிற்றார் 1- 4, சிற்றார் 2- 5.2, சுருளோடு- 5, பூதப்பாண்டி- 5.3, பாலமோர்- 5.4, மாம்பழத்துறையாறு- 1, திற்பரப்பு- 2.4 என பதிவாகி இருந்தது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 602 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 639 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. முக்கடல் அணைக்கு வினாடிக்கு 4.6 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.