< Back
மாநில செய்திகள்
கொடுமுடி பகுதியில் மழை
ஈரோடு
மாநில செய்திகள்

கொடுமுடி பகுதியில் மழை

தினத்தந்தி
|
25 July 2023 5:14 AM IST

கொடுமுடி பகுதியில் மழை பெய்தது.

கொடுமுடி

கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்று வீசியது. பின்னர் கரு மேகங்கள் சூழ்ந்தது. அதன்பின்னர் மாலை 5 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இரவு 8 மணி வரை பெய்த மழை சற்று குறைய தொடங்கி மீண்டும் நள்ளிரவு 12 மணி வரை பெய்துக்கொண்டே இருந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரங்களில் சாரல் மழை ஆங்காங்கே பெய்தது.

Related Tags :
மேலும் செய்திகள்