< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
தவுட்டுப்பாளையம் பகுதியில் மழை
|27 July 2023 12:07 AM IST
தவுட்டுப்பாளையம் பகுதியில் மழை பெய்தது.
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், கட்டிப்பாளையம், நத்தமேட்டுப்பாளையம், பாலத்துறை, வேலாயுதம்பாளையம், காகித ஆலை, புன்னம்சத்திரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம், கந்தம்பாளையம், திருக்காடுதுறை, கரைப்பாளையம், முத்தனூர், நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென தூறல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து கடும் வெயில் பொதுமக்களை வாட்டிவந்த நிலையில், திடீரென பெய்ய இந்த மழையால் பூமி குளிர்ச்சி அடைந்து இதமான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் வெயிலின் தாக்கம் காரணமாக வாடிய நிலையில் இருந்த பயிர்கள் துளிர்விட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.