< Back
மாநில செய்திகள்
சென்னையில் மழை - 35 விமான சேவைகள் பாதிப்பு
மாநில செய்திகள்

சென்னையில் மழை - 35 விமான சேவைகள் பாதிப்பு

தினத்தந்தி
|
7 Jun 2024 8:07 AM IST

சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மாலை பெய்யத் தொடங்கிய மழை அதிகாலை வரை விட்டு விட்டு பெய்தது.

இந்த நிலையில், இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 17 வருகை விமானங்கள் மற்றும் 18 புறப்பாடு விமானங்கள் உட்பட மொத்தம் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, மதுரை உள்ளிட்ட 17 இடங்களில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.

அதேபோல, அபுதாபி, கோலாலம்பூர், துபாய், சிங்கப்பூர், டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 18 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் செய்திகள்