புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் 2-வது நாளாக மழை
|புதுக்கோட்டையில் 2-வது நாளாக மழை பெய்தது.
மழை
புதுக்கோட்டையில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் தொடர்ந்து இன்று 2-வது நாளாக மழை பெய்தது. காலையில் லேசாக வெயில் அடித்தப்படி இருந்தாலும் மதியம் 2.30 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் பரவலாக பெய்தது.
மாவட்டத்தில் நேற்று பெய்த மழையில் ஒரு வீடு சேதமடைந்தது. மாடு ஒன்று செத்தது.
திருவரங்குளம்
திருவரங்குளம் வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இந்தநிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து மதியம் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழையளவு விவரம்
மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- புதுக்கோட்டை-4, ஆலங்குடி-7, கந்தர்வகோட்டை-3, கறம்பக்குடி-4.80, மழையூர்-4.60, கீழணை-67.20, திருமயம்-12.20, அரிமளம்-7.60, அறந்தாங்கி-24.40, ஆயிங்குடி-8.20, நாகுடி-36.40, மீமிசல்-4.80, ஆவுடையார்கோவில்-23, மணமேல்குடி-4.20, குடுமியான்மலை-2, விராலிமலை-7.30, உடையாளிப்பட்டி-6, கீரனூர்-20, பொன்னமராவதி-10.