< Back
மாநில செய்திகள்
வரட்டுப்பள்ளம் அணை பகுதியில்24.60 மி.மீ. மழை பதிவு
ஈரோடு
மாநில செய்திகள்

வரட்டுப்பள்ளம் அணை பகுதியில்24.60 மி.மீ. மழை பதிவு

தினத்தந்தி
|
18 March 2023 8:50 PM GMT

வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 24.60 மி.மீ. மழை பதிவு

அந்தியூர் அருகே பர்கூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இதன் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 24.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு கும்பரவாணி பள்ளம் வழியாக 19 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து ஏற்கனவே புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக வாய்க்கால் மூலம் 13 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் முழு கொள்ளளவு 33.46 அடியாகும். தற்போது அணையில் 30.25 அடி தண்ணீர் உள்ளது.

இதேபோல் நேற்று அந்தியூர், அத்தாணி, புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் மழை பெய்தது.

Related Tags :
மேலும் செய்திகள்