< Back
மாநில செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தினத்தந்தி
|
4 Dec 2022 8:43 PM GMT

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

சோலார்

ஈரோடு அருகே உள்ள சோலாரில் நேற்று காலை வெயில் அடித்தது. அதன்பின்னர் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த நிலையில் மதியம் 2.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. 3.15 மணி வரை லேசான மழை பெய்தது.

இதேபோல் 46 புதூர், நஞ்சை ஊத்துக்குளி, லக்காபுரம், கஸ்பாபேட்டை, அவல்பூந்துறை உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் சுமார் 20 நிமிடங்கள் பலத்த மழையும் பெய்தது. இதனால் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. சாலைகளில் மழை நீர் வழிந்து ஓடியது. குளிர்ந்த காற்றும் வீசியது. வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இதனால் வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்து சென்றன.

சத்தியமங்கலம்

இதேபோல் ஊஞ்சலூர் மற்றும் கருக்கம்பாளையம், கொளத்துப்பாளையம், கொளாநல்லி, நடுப்பாளையம், தேவம்பாளையம், ஆராம்பாளையம், அமராவதி புதூர் ஆகிய பகுதிகளில் நேற்று பகல் 11 மணி முதல் மதியம் 2 மணி வரை விட்டு் விட்டு மழை பெய்தது.

சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் 1 மணி முதல் சுமார் 2 மணி நேரம் விடாமல் மழை பெய்தது.

கொடுமுடி

புஞ்சைபுளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியிலும் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்தது. கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.

டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளான டி.ஜி.புதூர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், டி.என்.பாளையம், பங்களாப்புதூர், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், அடசபாளையம், பெருமுகை, அத்தாணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 4 மணிக்கு மேலாக சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.

Related Tags :
மேலும் செய்திகள்