< Back
மாநில செய்திகள்
அம்மாபேட்டை அருகே ரோட்டில் ஓடும் மழைநீரால் விபத்து ஏற்படும் அபாயம்- வடிகால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஈரோடு
மாநில செய்திகள்

அம்மாபேட்டை அருகே ரோட்டில் ஓடும் மழைநீரால் விபத்து ஏற்படும் அபாயம்- வடிகால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
10 Nov 2022 8:39 PM GMT

அம்மாபேட்டை அருகே ரோட்டில் ஓடும் மழைநீரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடனே வடிகால் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே ரோட்டில் ஓடும் மழைநீரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடனே வடிகால் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழிந்தோடும் மழைநீர்

அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூரில் இருந்து குருவரெட்டியூருக்கு சாலை செல்கிறது. இதில் மூணாஞ்சாவடி என்ற இடத்தில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளைவை ஒட்டிய மெயின் ரோடு அருகில் சுமார் ½ ஏக்கர் பரப்பளவில் 3 அடி ஆழம் மண் எடுத்து பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ரோட்டில் தண்ணீர் தேங்கி வழிந்து செல்கின்றது. இந்த தண்ணீர் அருகில் உள்ள சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றையும் மூழ்கடித்து செல்கின்றது. இதனால் அப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

வடிகால் அமைக்க கோரிக்கை

இந்த வழித்தடத்தில் அரசு பஸ்களும், கனரக வாகனங்களும் சென்று வருவதால் பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்து விட வாய்ப்புள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முயற்சிக்கும் போது அடிக்கடி பள்ளத்தில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

குறுகிய வழித்தடத்தில் உள்ள ஆபத்தான வளைவில் மழைநீர் ஆறுபோல் ஓடுகிறது. மேலும் பஸ் செல்லும் அகலத்துக்கு மட்டுமே ரோடு உள்ளது. எனவே மழைநீர் ரோட்டில் தேங்காதவாறு தடுக்க வடிகால் அமைத்தால் தண்ணீர் தேங்காதபடி வெளியேறி விடும். இதற்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்