< Back
மாநில செய்திகள்
நாமகிரிப்பேட்டையில் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமகிரிப்பேட்டையில் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
21 Oct 2022 12:15 AM IST

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. தூறலாக தொடங்கிய மழை கனமழையாக 40 நிமிடம் கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது.

மேலும் செய்திகள்