< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்

கோபி பகுதியில் பலத்த மழை: விவசாய தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்தது

தினத்தந்தி
|
18 Oct 2022 8:42 PM GMT

கோபி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக விவசாய தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

கடத்தூர்

கோபி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக விவசாய தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

கனமழை

கோபியை அடுத்துள்ள புதுக்கரைபுதூரில் அந்தியூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தடப்பள்ளி வாய்க்கால் பாலத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பாலத்தின் கீழே உள்ள பகுதி மண்ணை கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோபி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது,

இதனால் கோபி மையப்பகுதியில் செல்லும் கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் பணி நடைபெறும் பாலத்தின் கீழே மண்ணை கொண்டு அடைக்கப்பட்டு இருந்ததால் தண்ணீர் தொடர்ந்து செல்ல முடியாமல் அருகே உள்ள வாழை மற்றும் கரும்பு தோட்டங்களுக்குள் புகுந்தது.

பயிர்கள் சேதம்

இதுகுறித்து புதுக்கரைபுதூர் விவசாயிகள் மற்றும் தொட்டியபாளையம் பொதுமக்கள் உடனடியாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாரிகள், பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தார்கள். பின்னர் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து பாலத்தின் கீழே அடைத்து வைக்கப்பட்டு இருந்த மண்ணை அப்புறப்படுத்தினார்கள். இதனால் வாய்க்கால் வழியாக மழை தண்ணீர் சென்றது.

எனினும் தண்ணீர் ப தேங்கியுள்ளதால் வாழைகளும், கரும்பு பயிரும் சேதமாகும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்