< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
நாமக்கல் கலெக்டர் அலுவலக பகுதியில் அதிகபட்சமாக 97 மி.மீட்டர் மழைபதிவு
|24 Aug 2022 10:42 PM IST
நாமக்கல் கலெக்டர் அலுவலக பகுதியில் அதிகபட்சமாக 97 மி.மீட்டர் மழைபதிவு
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக கலெக்டர் அலுவலக சுற்றுவட்டார பகுதிகளில் 97 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு :-
கலெக்டர் அலுவலகம்-97, திருச்செங்கோடு-68, சேந்தமங்கலம்-44, நாமக்கல்-42, குமாரபாளையம்-28, கொல்லிமலை-25, புதுச்சத்திரம்-8, ராசிபுரம்-8, எருமப்பட்டி-3, பரமத்திவேலூர்-3, மோகனூர்-2. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 328 மி.மீட்டர் ஆகும்.
நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்று காலை முதலே வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது. மாலை 3.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.