< Back
மாநில செய்திகள்
காரைக்குடி பகுதியில் சாரல் மழை
சிவகங்கை
மாநில செய்திகள்

காரைக்குடி பகுதியில் சாரல் மழை

தினத்தந்தி
|
4 Aug 2022 10:33 PM IST

காரைக்குடி பகுதியில் சாரல் மழை பெய்தது.


சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பகலில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்றும் அதிகாலை முதல் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் காலை முதல் வானில் சூரியனை காண முடியாத நிலை இருந்தது. மேலும் மதிய வேளையில் சில இடங்களில் வானம் கருமேக மூட்டத்துடன் மாலை நேரம் போன்று காணப்பட்டது. சாரல் மழையால் காலையில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள், அலுவலகத்திற்கு சென்றவர்கள் நனைந்தபடியும், குடையுடனும் சென்றதை காண முடிந்தது. சில இடங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. காலை முதல் இரவு வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் குளுமையான நிலை நீடித்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


மேலும் செய்திகள்