< Back
மாநில செய்திகள்
இடி, மின்னலுடன் கனமழை
மதுரை
மாநில செய்திகள்

இடி, மின்னலுடன் கனமழை

தினத்தந்தி
|
26 May 2022 8:42 PM GMT

சோழவந்தான் பகுதியில் பலத்தகாற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்தது. இதில் தென்னை மரங்கள், வாழை மரங்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

சோழவந்தான்,

சோழவந்தான் பகுதியில் பலத்தகாற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்தது. இதில் தென்னை மரங்கள், வாழை மரங்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

பலத்தகாற்று

சோழவந்தான், திருவேடகம், குருவித்துறை, மன்னாடி மங்கலம், காடுபட்டி, ரிஷபம், நெடுங்குளம், இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம் உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்தகாற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்தது. சோழவந்தான் ரோடுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த காற்று வீசியதில் விவசாய விளை பொருட்கள் மிகுந்த சேதம் அடைந்துள்ளது. பலன் தரக்கூடிய நிலையில் இருந்த வாழை மரங்கள், தென்னை மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. சுமார் 200 தென்னை மரங்கள், வாழைமரங்கள், வெற்றிலைக்கொடிக்கால் மற்றும் 5 மின் கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முபாரக்சுல்தான் சேதங்களை பார்வையிட்டார்.

நிவாரணம்

இதுகுறித்து குருவித்துறை ஊராட்சி துணைதலைவர் சீனிவாசன் கூறியதாவது:- பலத்த மழையால் விளைந்து அறுவடைக்கு தயாராக பயிர்கள் மற்றும் தென்னை, மரங்கள் வாழை மரங்கள் அதிகமாக சேதம் அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்