< Back
மாநில செய்திகள்
ஒகேனக்கல், பாலக்கோடு பகுதிகளில் பரவலாக மழை
தர்மபுரி
மாநில செய்திகள்

ஒகேனக்கல், பாலக்கோடு பகுதிகளில் பரவலாக மழை

தினத்தந்தி
|
21 Sep 2023 7:00 PM GMT


தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

மழை

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பாலக்கோடு, ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஒகேனக்கலில் 27 மி.மீட்டர் மழை பதிவானது.

பாலக்கோட்டில் 10.2 மி.மீட்டர் மழை பெய்தது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் மழைப்பொழிவு குறைந்து இருந்தது. இதனால் ஏரி, குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர் இருப்பு குறைந்து காணப்பட்டது. மானாவாரி விவசாய நிலங்களில் சிறுதானிய பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர் சாகுபடி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.

நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மானாவாரி பயிர் சாகுபடி பணிகள் மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளன. தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக ஏரிகள், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் மழைநீர் கணிசமான அளவில் தேங்கியுள்ளது. இதேபோல் விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வகையான பயிர் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்