< Back
மாநில செய்திகள்
நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளியில் சாரல் மழை
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளியில் சாரல் மழை

தினத்தந்தி
|
7 Sept 2023 12:30 AM IST

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் நேற்று பகல் பொழுதில் வெயில் அடித்தது. இதையடுத்து மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடியுடன்கூடிய சாரல் மழை பெய்தது. சுமார் 40 நிமிடம் பெய்த இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் தங்களது நிலங்களில் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

மேலும் செய்திகள்