< Back
மாநில செய்திகள்
ரெயில் நிலைய சீரமைப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்
மாநில செய்திகள்

ரெயில் நிலைய சீரமைப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்

தினத்தந்தி
|
7 May 2024 11:27 AM IST

ரெயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்படுள்ளது.

சென்னை,

சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர்-கோவை ரெயில் நிலையங்களுக்கு இடையே வஞ்சிப்பாளையம் குட்ஷெட் பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதற்காக சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, எர்ணாகுளம்-டாடாநகர் ரெயில் போத்தனூர், திருப்பூர் வழியாக செல்கிறது. இந்த ரெயில் எர்ணாகுளத்தில் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு கோவை ரெயில் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டு இயக்கப்படும். 1 மணி நேரம் தகுந்த இடத்தில் நிறுத்தி பின்னர் இயக்கப்படும்.

இதுபோல் வருகிற 13-ந் தேதி திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் வருகிற 10-ந் தேதி திப்ருகரில் இருந்து புறப்பட்டு கோவைக்கு 13-ந் தேதி வந்து சேர வேண்டும். இந்த ரெயில் இருகூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும். கோவை ரெயில் நிலையம் செல்லாது.

புதுடெல்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந் தேதி புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு 13-ந் தேதி கோவை வர வேண்டும். இந்த ரெயில் இருகூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும். கோவை ரெயில் நிலையத்துக்கு வராது.

பெங்களூரு-எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 13-ந் தேதி இருகூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும். கோவை ரெயில் நிலையம் செல்லாது. திருச்சி-பாலக்காடு ரெயில் வருகிற 10-ந் தேதி திருச்சியில் இருந்து திருப்பூர் ரெயில் நிலையம் வரை இயக்கப்படும். திருப்பூரில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்