< Back
மாநில செய்திகள்
மகன்கள் வேலைக்கு செல்லாத விரக்தியில்  ரெயில்வே பாதுகாப்பு படைவீரர் தற்கொலை  ஆத்தூர் அருகே சோகம்
சேலம்
மாநில செய்திகள்

மகன்கள் வேலைக்கு செல்லாத விரக்தியில் ரெயில்வே பாதுகாப்பு படைவீரர் தற்கொலை ஆத்தூர் அருகே சோகம்

தினத்தந்தி
|
23 Nov 2022 2:08 AM IST

ஆத்தூர் அருகே மகன்கள் வேலைக்கு செல்லாத விரக்தியில் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆத்தூர்,

ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்

ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை நேரு நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 55). இவர் ஜோலார்பேட்டை ெரயில்வே பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு சித்ரா என்ற மனைவியும், நிரேஷ் குமார் (27), நிர்மல் குமார் (25) என்ற மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் மகன்கள் வேலைக்கு செல்லாமல் உள்ளதால் மனம் வெறுப்படைந்த அண்ணாதுரை விடுமுறையில் காட்டுக்கோட்டைக்கு வந்தார்.

தற்கொலை

இதனிடையே காட்டுக்கோட்டையில் உள்ள தனது வீட்டில் நேற்று அண்ணாதுரை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மகன்கள் வேலைக்கு செல்லாத விரக்தியில் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம ஆத்தூழ் அருகே சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

மேலும் செய்திகள்