< Back
மாநில செய்திகள்
ரெயில் பயணிகள் சங்க கூட்டம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

ரெயில் பயணிகள் சங்க கூட்டம்

தினத்தந்தி
|
11 July 2023 10:08 PM IST

அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்க கூட்டம் நடந்தது.

அரக்கோணம்

அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கம் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் நைனா மாசிலாமணி தலைமை தாங்கினார். பொது செயலாளர் குணசீலன் முன்னிலை வகித்தார்.

பொருளாளர் தியாகராஜன் வரவேற்றார்.

கூட்டத்தில் ரெயில் நிலையத்தில் அடிபடை வசதிகள் மேற்கொள்ளவும், நிறுத்தம் இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தம் செய்ய வேண்டி ரெயில்வே மந்திரி, தென்னக ரெயில்வே உயர் அலுவலர்கள், சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோரிடம் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனுக்கள் அளிப்பது குறித்து விவாதித்தனர்.

இதனை தொடர்ந்து ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி கூறுகையில் கடந்த 30 ஆண்டுகளாக ரெயில் நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அரக்கோணம் ரெயில் நிலையத்தை புறக்கணித்து வருகிறனர்.

ரெயில் நிலையத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காமல் இதே நிலை தொடர்ந்தால் ரெயில் பயணிகள் மற்றும் பொது மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடபட்டுள்ளது. என்று தெரிவித்தார்.

இதில் ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் வெங்கடரமணன், ஏகாம்பரம், சரஸ்வதியம்மாள் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்