மதுரை
ரெயில்வே மேம்பால பணிகள்: செல்லூர்-தத்தனேரி பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
|ரெயில்வே மேம்பால பணிகள் நடப்பதால் செல்லூர்-தத்தனேரி பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாலப்பணிகள்
மதுரை செல்லூர்-தத்தனேரி ரெயில்வே மேம்பாலத்தில் பாலம் இணைக்கும் பணிகள் நடைபெறுவதால் பாலத்தின் இரு மார்க்கமும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 26-ந்தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது. மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் சாலை வழியாக ஆரப்பாளையம் வரும் பஸ்கள் பாத்திமா கல்லூரி சந்திப்பு வலதுபுறம் குரு தியேட்டர் சந்திப்பில் இடது புறம் திரும்பி ஆரப்பாளையம் செல்லலாம். கோரிப்பாளையம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் ஏ.வி. பாலம்-யானைக்கல் சந்திப்பு- சிம்மக்கல் ரவுண்டானா தமிழ்சங்கம் ரோடு வழியாக ஆரப்பாளையம் செல்லலாம். மறுமார்க்கமாக தமிழ்சங்கம் ரோடு சிம்மக்கல் ரவுண்டானா - யானைக்கல் சந்திப்பு புதுப்பாலம் சந்திப்பு வலது புறம் திரும்பி கோரிப்பாளையம் சந்திப்பை அடையலாம்.
காளவாசல் சந்திப்பு
திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் அத்தியாவசிய கனரக வாகனங்கள் (பால் வண்டி, ரேஷன் பொருட்கள், பெட்ரோல் லாரிகள் மட்டும்) பாத்திமா கல்லூரி சந்திப்பு வலது - குரு தியேட்டர் சந்திப்பு காளவாசல் சந்திப்பு இடது, அரசரடி சந்திப்பை அடைந்து தமிழ் சங்கம் ரோடு வழியாகவும் அல்லது பாத்திமா கல்லூரி சந்திப்பு இடது கூடல்நகர் ரெயில்வே மேம்பாலம் புதுநத்தம் சாலை ஆனையூர், அய்யர்பங்களா சந்திப்பு வழியாகவும் மற்றும் மூன்றுமாவடி சந்திப்பு அழகர்கோவில் சாலை வழியாகவும் கோரிப்பாளையம் செல்லலாம்.
இதுபோல், திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள், இலகுரக நான்கு சக்கர வாகனங்கள் செல்லூர் பாலம் வரும் வரை மாற்றம் ஏதும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் தத்தனேரி - "சப் -வே" வழியாக பாலம் ஸ்டேசன் ரோட்டை அடைந்து கோரிப்பாளையம் பகுதிக்கு செல்லலாம். மறுமார்க்கமாக கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து செல்பவர்கள் செல்லூர் பாலம் வரை மாற்றம் ஏதும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் அடியில் சர்வீஸ் சாலையில் சென்று "சப்-வே" வழியாக தத்தனேரி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலையை அடைந்து அம்மா பாலம் சந்திப்பு வழியாக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.