திருவாரூர்
தண்டவாள பராமரிப்பு பணிகள்
|நீடாமங்கலம்-மன்னார்குடி ரெயில் பாதையில் சம்பாவெளி ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம்-மன்னார்குடி ரெயில் பாதையில் சம்பாவெளி ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது.
ரெயில்வே கேட்
நீடாமங்கலத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் நெடுஞ்சாலையில் சம்பாவெளி கிராம பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இது நீடாமங்கலம்-மன்னார்குடி ரெயில் பாதையாகும். மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக நாள்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் மற்றும் அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு நெல் ஏற்றி செல்லும் சரக்கு ரெயில்களும் செல்கின்றன.
இந்த ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் 20,21-ந் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
பராமரிப்பு பணிகள்
அதன்படி நேற்று காலை 9 மணிக்கு சம்பாவெளி ரெயில்வே கேட் மூடப்பட்டு தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. ரெயில்வே பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரெயில் தண்டவாளம் பராமரிப்பு பணிக்காக ரெயில்வே கேட் மூடப்பட்டதால் வாகனங்கள் மாற்று பாதை வழியாக இயக்கப்பட்டது. வெளியூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவது தெரியாமல் ரெயில்வேகேட் வரை சென்று திரும்பி வந்து மாற்று பாதை வழியில் சென்றனர்.
.