சேலம்
கடந்த 6 மாதங்களில் சரக்கு, பார்சல் சேவையில்ரூ.165 கோடி வருவாய் ஈட்டியது சேலம் ரெயில்வே கோட்டம்கடந்த ஆண்டை விட அதிகம்
|கடந்த 6 மாதங்களில் சரக்கு, பார்சல் சேவையில் சேலம் கோட்டம் ரூ.165 கோடி வருவாய் ஈட்டியது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.
சூரமங்கலம்
கடந்த 6 மாதங்களில் சரக்கு, பார்சல் சேவையில் சேலம் கோட்டம் ரூ.165 கோடி வருவாய் ஈட்டியது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.
சேலம் கோட்டம்
சேலம் ரெயில்வே கோட்டம் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் அரையாண்டில் 14.5 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு ரூ.156.16 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இதே கால கட்டத்தில் ரூ.138.05 கோடி வருவாய் ஈட்டியது. முந்தைய ஆண்டின் வருவாயை விட சுமார் 13.12 சதவீத வளர்ச்சி ஆகும்.
சரக்குகளை பொறுத்தவரை இருகூரில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் 9.5 லட்சம் டன்களை கையாண்டு ரூ.114.88 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. 2 லட்சம் டன் சிமெண்டு சரக்கு கையாண்டு ரூ.10.77 கோடியும், 57 ஆயிரம் டன் இரும்பு மற்றும் ஸ்டீல் உற்பத்தி பொருட்களை கையாண்டு முறையே ரூ.6.94 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
ரூ.9.48 கோடி வருவாய்
கரூர் அருகே வீரராக்கியம், பாளையம் பகுதியிலும், சங்ககிரி பகுதியில் இருந்தும் சரக்குகள் ஏற்றப்பட்டன. இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்கள் சேலம் மேச்சேரியில் இருந்து ஏற்றப்பட்டன. அதேபோல பார்சல் சேவையைப் பொறுத்தவரை ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் 2,21,590 குவிண்டாலை கையாண்டு ரூ.9.48 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இதில் காய்கறிகள் மற்றும் பழங்கள் மற்றும் பொறியியல் பொருட்கள் கோவையில் இருந்து ஏற்றப்பட்டு புதுடெல்லி, கவுகாத்தி போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டன. திருப்பூரில் இருந்து மும்பை, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஆடைகள் கொண்டு செல்லப்பட்டன.
மேலும் ஈரோட்டில் இருந்து பார்சல் வேன்கள் மூலம் பாட்னா, மால்டா, கவுகாத்தி போன்ற பகுதிகளுக்கு மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டன. இவை தவிர சேலம் மற்றும் கரூரில் இருந்தும் பல்வேறு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.