< Back
மாநில செய்திகள்
புள்ளம்பாடி-திருமழபாடி சாலையில் ரெயில்வே கேட் பராமரிப்பு பணி; இன்றும், நாளையும் போக்குவரத்துக்கு தடை
திருச்சி
மாநில செய்திகள்

புள்ளம்பாடி-திருமழபாடி சாலையில் ரெயில்வே கேட் பராமரிப்பு பணி; இன்றும், நாளையும் போக்குவரத்துக்கு தடை

தினத்தந்தி
|
2 Oct 2023 2:36 AM IST

புள்ளம்பாடி-திருமழபாடி சாலையில் ரெயில்வே கேட் பராமரிப்பு பணி; இன்றும், நாளையும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கல்லக்குடி:

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி-திருமழபாடி சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணிகள் இன்றும்(திங்கட்கிழமை), நாளையும்(செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்சி, லால்குடியில் இருந்து புள்ளம்பாடி வழியாக திருமழபாடி, திருமானூர், தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள் மற்றும் பயணிகள் புள்ளம்பாடி, வடுகர்பேட்டை கோவாண்டகுறிச்சி வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்