< Back
மாநில செய்திகள்
ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
12 Oct 2023 2:16 AM IST

நெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெயில்வே டி.ஆர்.இ.யூ.- சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் இணைந்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிளை தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோட்ட இணைச்செயலாளர் கே.ராஜூ, துணைச்செயலாளர் குமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.

ரெயில்வே கேட்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் ராணுவ வீரர்களை பணியில் அமர்த்துவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கோட்ட துணைச் செயலாளர் சவுந்தரராஜன், கிளைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், சகாய வில்பர்ட் மற்றும் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்