விழுப்புரம்
ரெயில்வே ஊழியர் மனைவியை தாக்கி செல்போன் பறிப்பு
|விழுப்புரத்தில் ரெயில்வே ஊழியரின் மனைவியை தாக்கி செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் வடக்கு ரெயில்வே காலனியை சேர்ந்தவர் கிளிப்டென்டிலிப்டெல்லாஸ். ரெயில்வே மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி எலிசபெத் டெல்லாஸ். இவரின் கணவர் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றார். இதனால் எலிசபெத் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 20 வயதுடைய வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த எலிசபெத் டெல்லாஸ் திருடன், திருடன் என கூச்சலிட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் சத்தம்போடாதே என கூறி எலிசபெத் டெல்லாசின் வாயில் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து கொண்டு தப்பிச்சென்றார்.
வலைவீச்சு
இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.