< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இந்தி திணிப்பை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் - சென்னை சென்ட்ரலில் பதற்றம்
|8 Nov 2022 3:43 PM IST
போராட்டம் காரணமாக 200க்கும் மேற்பட்ட போலீசார் செண்ட்ரல் ரெயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.
சென்னை,
மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து ஆதி தமிழர் கட்சி சார்பில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
இதன் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் கானப்பட்டது.
இதையடுத்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஒரு பிரிவினர் கலைந்துசென்றனர். மற்றொரு பிரிவினர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.