< Back
மாநில செய்திகள்

மதுரை
மாநில செய்திகள்
ரெயில் மறியலுக்கு முயன்ற 16 பேர் கைது

15 Jan 2023 12:15 AM IST
ரெயில் மறியலுக்கு முயன்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாரத ஸ்டேட் வங்கியின் பணியாளர் தேர்வு பொங்கல் பண்டிகை தினத்தில் நடக்கிறது. இதனை கண்டித்தும், தேர்வுக்கான தேதியை அறிவித்த மத்திய அரசை கண்டித்தும் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, அவர்கள் மாநில செயலாளர் சிக்கந்தர் தலைமையில் நேற்று காலை ரெயில் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் கண்டன கோஷங்களுடன் ரெயில் மறியலுக்கு முயன்றனர். அப்போதுஅங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.