< Back
மாநில செய்திகள்
தஞ்சை, கும்பகோணம் வழியாக மும்பைக்கு ெரயில் சேவை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சை, கும்பகோணம் வழியாக மும்பைக்கு ெரயில் சேவை

தினத்தந்தி
|
23 Oct 2022 2:03 AM IST

தஞ்சை, கும்பகோணம் வழியாக மும்பைக்கு ெரயில் சேவை

தஞ்சை, கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி ரெயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து வந்தது. இந்த கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே நிர்வாகம் வருகிற 27-ந்தேதி முதல் தஞ்சை மற்றும் கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி ரெயில் சேவை இயக்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி 27-ந் தேதி முதல் வதோத்ரா, சூரத், வாசை ரோடு, கல்யாண் (மும்பை), பூனா, மந்த்ராலயம், ரேணிகுண்டா, சென்னை எழும்பூர், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக அகமதாபாத்-திருச்சி இடையே ஒரு வாராந்திர குளிர்கால சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக மேற்கு மண்டல ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரெயில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு சனிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் திருச்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.45 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம் வழியாக அகமதாபாத்திற்கு இரவு 9.15 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் சேவை 27.10.2022 முதல் 27.11.2022 வரை இரு மார்க்கங்களிலும் தலா 5 முறை இயக்கப்படும் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்