< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
காஞ்சீபுரத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரெயில் சேவை பாதிப்பு
|22 April 2023 2:54 PM IST
உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலைய பகுதியில் பரஞ்ஜோதி அம்மன் கோவில் அருகே மின்சார ரெயில் செல்லும் தண்டவாளத்தில் உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. உடனடியாக ரெயில்வே துறையினர் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்ததால் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்த விவரங்கள் உடனடியாக செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் கோட்ட ரெயில்வே துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு இருந்த ரெயில்வே தொழில்நுட்ப பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பழுதை நீக்கினார்கள்.
இதன் காரணமாக காஞ்சீபுரத்தில் இருந்து கடற்கரை வழியாக செல்லும் மின்சார ரெயில் சேவை நேற்று மாலை 3.50 முதல் 5.50 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.