< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தண்டவாளத்தில் விரிசல்: திருச்செந்தூர் சென்ற ரெயில் பாதியில் நிறுத்தம்
|18 Jan 2024 12:06 PM IST
லோகோ பைலட் சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
திண்டுக்கல்,
ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் ரெயில்வே பாதையில், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற ரெயில் பாதியில் நிறுத்தப்பட்டது.
ரெயிலின் லோகோ பைலட் சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சரிசெய்தனர். பின்னர் ரெயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.