< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
கோவை-நாகர்கோவில் ரெயில் மாற்று பாதையில் இயக்கம்
|21 Jun 2022 2:11 AM IST
கோவை-நாகர்கோவில் ரெயில் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது.
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட மதுரை-திருமங்கலம் இரட்டை அகல ரெயில் பாதையில் உள்ள மின்சார வழித்தடத்தில் மின் வயர்களின் இணைப்பில் மாற்றம் செய்யப்பட உள்ளது.இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ெரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது. அதனை தொடர்ந்து, கோவையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் போக்குவரத்தில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை (புதன்கிழமை) ஆகிய நாட்களில் மட்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோவையிலிருந்து நாகர்கோவில் செல்லும் ரெயில் (வ.எண்.16322) மதுரையிலிருந்து மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகர் சென்று அங்கிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும். இந்த ரெயில் மதுரை- விருதுநகர் இடையே 2 நாட்களுக்கு மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.