< Back
மாநில செய்திகள்
ராகுல் காந்தி பதவி பறிப்பு என் மனதை கலங்கடித்து விட்டது - குமரி அனந்தன்
மாநில செய்திகள்

ராகுல் காந்தி பதவி பறிப்பு என் மனதை கலங்கடித்து விட்டது - குமரி அனந்தன்

தினத்தந்தி
|
30 April 2023 12:35 AM IST

ராகுல் காந்தி பதவி பறிப்பு என் மனதை கலங்கடித்து விட்டது என குமரி அனந்தன் பேட்டி அளித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல்காந்தியின் பதவியை பறித்து சிறைக்கு அனுப்பும் அளவுக்கு அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் எந்த சாதியையும் இழிவுபடுத்தி பேசவில்லை. மோடி என பேசியதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. பதவியை பறித்துள்ளார்கள். இது என்னுடைய மனதை கலங்கடிக்க செய்துவிட்டது. நான் 17 முறை நடைபயணம் மேற்கொண்டு இருக்கின்றேன். ஆனால் ஒரே நடைபயணத்தில் ராகுல் காந்தி அதனை முறியடித்து விட்டார். அவரது கருத்துகள் இன்றைக்கு மக்களை சென்றடைந்து வருகிறது. பிரதமராகும் அனைத்து தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. காங்கிரஸ் வளர காமராஜரின் வழிகளை பின்பற்ற வேண்டும். இன்றைய இளைஞர்கள் குறிக்கோளுடன் வாழ வேண்டும். அந்த குறிக்கோளில் இருந்து பின்வாங்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்