< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராகுல்காந்திக்கு மேல்முறையீட்டு வழக்கில் நீதி கிடைக்கும்- கமல்ஹாசன் டுவிட்
|23 March 2023 8:13 PM IST
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான உங்கள் மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் ராகுல்காந்திக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நம்பிக்கையூட்டும் வகையில் 'டுவிட்டர்' பதிவு வெளியிட்டார். அதில், இந்த நேரத்தில் நான் உங்களுடன் நிற்கிறேன். நீங்கள் அதிக சோதனையான நேரங்களையும், நியாயமற்ற தருணங்களையும் பார்த்து இருக்கிறீர்கள்.
நமது நாட்டின் நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான உங்கள் மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். சத்யமேவ ஜெயதே" என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.