< Back
மாநில செய்திகள்
ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதியிழப்பால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் வருமா? திருநாவுக்கரசர் பதில்
மாநில செய்திகள்

ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதியிழப்பால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் வருமா? திருநாவுக்கரசர் பதில்

தினத்தந்தி
|
2 April 2023 4:45 AM IST

ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதியிழப்பால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் வருமா? என்ற கேள்விக்கு திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. கலந்து கொண்டு ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதியிழப்பு பற்றி பேசுகையில், "ராகுல் காந்தி, தான் யாரையும், எந்த ஒரு பிரிவையும் குறிப்பிட்டு பேசவில்லை என்று சொல்லிய பிறகும், கர்நாடகத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்ட பேச்சை வைத்து அவர் மீது குஜராத்தில் வழக்கு தொடுத்து தீர்ப்பை வாங்கி உள்ளனர். இந்த வழக்கில் இருந்து அவர் கோர்ட்டு மூலமாகவே விடுதலையாவார்" என்று கூறினார்.

திருநாவுக்கரசர் மேலும் கூறும்போது, ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பிரச்சினையை திசை திருப்ப பா.ஜ.க. செயல்படுகிறது. வரலாற்றிலேயே ஆளும் கட்சி நாடாளுமன்றத்தை முடக்குவது இப்போதுதான் நடைபெறுகிறது என்றார். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதியிழப்பால் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால், அதில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா? என்ற கேள்விக்கு, "இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி விரைவில் எம்.பி.யாவார்" என்று திருநாவுக்கரசர் பதில் அளித்தார். இதேபோல கர்நாடகத்தில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரத்தால் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பாதிக்குமா? தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் மாற்றம் வருமா? அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. கூட்டணி குறித்தும், நிகழ்ச்சி தொகுப்பாளரின் சமகால அரசியல் கேள்விகளுக்கும் திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்