< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
காசிவிசுவநாதர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா
|10 Oct 2023 12:15 AM IST
நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் விசாலாட்சி சமேத காசிவிசுவநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீனம் ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு இக்கோவிலில் ராகு-கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.