விருதுநகர்
கோவில்களில் ராகு, கேது பெயர்ச்சி விழா
|ராகு, கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராகுபகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கு நேற்று பிற்பகல் 3.40 மணிக்கும், கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு நேற்று மாலை 3.41 மணிக்கும் பெயர்ச்சி அடைந்தனர்.
இதையொட்டி விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் உள்ள ராகு, கேதுவிற்கு சிறப்பு பூஜை நடந்தது. திருச்சுழி திருமேனிநாதர் கோவில், சாத்தூர் சொக்கநாத சுவாமி கோவில், சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூைஜ நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு, கேதுவை தரிசனம் செய்தனர்.ரஜபாளையம் மாயூரநாத சுவாமி கோவில், வெம்பக்கோட்டை அருகே உள்ள சத்திரம் காசி விஸ்வநாதர் கோவில், அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவில், மீனாட்சி சொக்கநாதர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.குரு, கேது பெயர்ச்சி நேரத்தில் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பரிகார ராசிக்காரர்கள் கலந்து கொண்டு தங்களது பெயரில் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாத சுவாமி கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. முன்னதாக ராகு, கேதுவுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதன் பிறகு யாகசாலை நடந்தது.இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ஜவகர், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். சிறப்பு பூஜைகளை ரகு மற்றும் ரமேஷ் செய்தனர். ராகு, கேது பெயர்ச்சியையொட்டி எண்ணற்ற கோவில்களில் சிறப்பு யாகம் நடந்தது. இதில் திரளான பேர் பங்கேற்றனர்.