வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் - கடன் கொடுத்தவரை கத்தியால் குத்திக் கொன்ற காதல் ஜோடி
|சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஜோடியை போலீசார் கைது செய்தனர்.
தேனி,
தேனி அருகே வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரத்தில் கடன் கொடுத்தவரை கத்தியால் குத்திக் கொலை செய்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த மன்மதன் என்பவர், பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஜெயதீபா (40 வயது) என்ற பெண் 30 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாகவும், ஆனால் பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே கடனை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததால், ஆத்திரமடைமந்த ஜெயதீபா, தனது கள்ளக்காதலனான முத்துமணி என்பவருடன் சேர்ந்து, வீட்டில் தனியாக இருந்த மன்மதனை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகையை இருவரும் திருடி சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மன்மதனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஜெயதீபா மற்றும் முத்துமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.