< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஏடிஎம்-யில் பணம் வராத ஆத்திரம்... கண்ணாடியை அடித்து நொறுக்கிய ஆட்டோ ஓட்டுநர்
|4 Sept 2022 8:50 PM IST
நெல்லையில் ஏடிஎம்-மில் பணம் வராததால், ஆத்திரத்தில் கதவு கண்னாடியை உடைத்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் கொக்கிரக்குளம் பகுதியில் மதுபோதையில் ஏடிஎம்-மில் பணம் எடுக்க வந்ததாக கூறப்படுகிறது. அவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முற்பட்டபோது பணம் வராததால், ஆத்திரம் அடைந்த அவர், ஏடிஎம்-மின் கதவு கண்ணாடியை உடைத்துச்சென்றுள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஆட்டோ ஓட்டுநர் மாரியப்பன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.