< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
சங்கர நாராயண சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா
|11 Feb 2023 12:15 AM IST
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை கடைசி வெள்ளிக்கிழமை அன்று தெப்ப திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான தெப்ப திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் ஓடை தெருவில் ஆவுடை பொய்கை தெப்பத்தில் எதிரே உள்ள உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதனைத்தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. ஆவுடை பொய்கை தெப்பத்தில் இரவு தெப்பத்திருவிழா நடைபெற்றது.
இதில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி, சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.