தென்காசி
தெப்ப திருவிழா
|ஆழ்வார்குறிச்சியில் தெப்ப திருவிழா நடந்தது.
கடையம்:
ஆழ்வார்குறிச்சியில் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் தெப்பத்திருவிழா கடந்த 26-ந் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு சிவசைலத்தில் இருந்து சுவாமி அம்பாள் வெள்ளி சப்பரத்தில் ஆழ்வார்குறிச்சிக்கு எழுந்தருளல் நடந்தது. நேற்று காலை திருக்குள விநாயகர் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு விளாபூஜை அபிஷேகம், தீபாராதனையும், பின்னர் சுவாமி அம்பாள் கேடயத்தில் திருக்குள விநாயகர் கோவிலில் இருந்து எழுந்தருளி தருமபுர ஆதீனமடத்தில் இறங்குதலும், உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது.
பின்னர் சாயரட்சையும் இரவு சுவாமி அம்பாள் கேடயத்தில் தெப்பத்திற்கு எழுந்தருளலும் நடைபெற்றது. தெப்பத்தில் 11 சுற்று வலம் வருதல், வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் திருக்குளம் வீதி உலா வருதல், பெரியதளவாய் மாடசாமிக்கு காட்சியளித்தலும் நடந்தது.
விழா ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டியினர், நகர வியாபாரிகள் சங்கத்தினர், உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.