< Back
மாநில செய்திகள்
அதிகபட்சமாக பயணம் செய்த மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு குலுக்கல் மூலம் பரிசு
சென்னை
மாநில செய்திகள்

அதிகபட்சமாக பயணம் செய்த மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு குலுக்கல் மூலம் பரிசு

தினத்தந்தி
|
2 July 2022 12:27 PM IST

அதிகபட்சமாக பயணம் செய்த மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு குலுக்கல் பரிசானது நந்தனம் ரெயில் நிலையத்தில் வழங்கப்பட்டது

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு பொருள் வழங்கப்படும் என்று மெட்ரோ ரெயில்நிறுவனம் அறிவித்து இருந்தது. அதனடிப்படையில் 3-வது மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடந்தது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் (நிதி) பிரசன்ன குமார் ஆச்சார்யா பரிசுகளை வழங்கினார்.

அடுத்த மாதத்திற்கான குலுக்கல் இம்மாத இறுதியில் நடத்தப்படும். பரிசு விவரங்களை தெரிந்து கொள்ள அனைத்து மெட்ரோ ரெயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களை அணுகலாம்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமேலாளர் ஆர்.முரளி (நிதி), கூடுதல் பொதுமேலாளர் எஸ்.சதீஷ்பிரபு, மேலாளர்கள் பி.லட்சுமி (வருவாய்) மற்றும் கே.எஸ்.அருண் (இயக்கம்), துணை மேலாளர் ஏ,அருள்ராதா (இயக்கம்), நிர்வாக இயக்குனர் அனந்த கிருஷ்ணன், இயக்குனர் குமணன், பொதுமேலாளர் சீனிவாசன் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்