< Back
மாநில செய்திகள்
செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி
அரியலூர்
மாநில செய்திகள்

செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி

தினத்தந்தி
|
11 Jan 2023 12:52 AM IST

செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கல்லங்குறிச்சி கிராமத்தில் நாய் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடும் முகாம் நேற்று நடந்தது. முகாமை கலெக்டா் ரமணசரஸ்வதி தொடங்கி வைத்தார். முகாமில் 150 நாய்களுக்கும், 9 பூனைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் தங்களுடைய வீட்டில் வளர்க்கும் நாய்களை கொண்டு வந்து வெறிநோய் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மேலும் வெறிநோய் தடுப்பு குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்