< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ரேபீஸ் நோய் தடுப்பு தினம் - தமிழகம் முழுவதும் நாய், பூனைகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்
|28 Sept 2022 7:10 PM IST
தமிழகம் முழுவதும் இன்று நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
சென்னை,
சர்வதேச ரேபீஸ் நோய் தடுப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள், காவல்துறையினரின் மோப்ப நாய்கள் ஆகியவற்றுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன.
நாய்கள் வளர்ப்போர் மற்றும் பராமரிப்போர் கையாள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நெல்லை ஸ்ரீபுரம், பழனி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் இந்த முகாம்களில் ரேபீஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.