< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு வினாடி- வினா போட்டி
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு வினாடி- வினா போட்டி

தினத்தந்தி
|
14 July 2022 11:02 PM IST

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு வினாடி- வினா போட்டி நடந்தது.

சீர்காழி:

சீர்காழி எல்.எம்.சி.மேல்நிலைப்பள்ளியில் நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஆணையர் பொறுப்பு ராஜகோபால் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ரூபி வரவேற்றார். பின்னர் நடைபெற்ற மாணவ-மாணவிகளுக்கான வினாடி வினா போட்டியை நகர் மன்ற தலைவர் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், நகர் மன்ற உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சியாமளா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வினாடி-வினா போட்டி நடைபெற்றது.

மேலும் செய்திகள்