அரியலூர்
பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி
|பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டார வள மையத்தில், மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில் நேற்று மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி தலைமை தாங்கி, போட்டியை தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் வரவேற்றார். போட்டிகளின் நடுவர்களாக புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன், உதயநத்தம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அறிவுச்செல்வன், உடையார்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ராமலிங்கம், ஜெயங்கொண்டம் அரசினர் மகளிர் உயர் நிலைப்பள்ளி தமிழாசிரியர் விஜயலெட்சுமி ஆகியோர் செயல்பட்டனர். போட்டிகளில் அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை என 13 பள்ளிகளை சேர்ந்த 26 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் அரியலூரில் நடைபெற இருக்கும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ளார்கள். இதில் தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.